பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு வினியோகம்: வரிசையில் காத்திருந்த மக்கள்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 பொங்கல் பரிசு வினியோகம்: வரிசையில் காத்திருந்த மக்கள்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.கிணத்துக்கடவு கிழக்கு, மேற்கு பகுதிகளாக பிரித்து இரண்டு ரேஷன் கடைகள் செயல்படுகிறது. நேற்று இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., சண்முகம் தலைமை வகித்து, பொங்கல் பரிசு பொருட்களை வழங்குவதை துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, ரேஷன் கார்டுகளை காண்பித்து, பொங்கல் தொகை ஆயிரம் ரூபாயும், கரும்பு, அரிசி, சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.*வால்பாறையில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் குணசேகரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., கஸ்துாரி, கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ் ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர். வால்பாறை தாலுகாவில் உள்ள, 48 ரேஷன் கடைகளிலும் நேற்று முதல் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜன-202019:27:25 IST Report Abuse
ஆப்பு பொருளா விநியோகம் செஞ்சாதான் ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. கிரண் பேடி சொல்ற மாதிரி நேரடியா வங்கிக் கணக்கில் வரவு வெச்சா துட்டு அடிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X