பொது செய்தி

தமிழ்நாடு

உள்வாங்கும் ஆள் இறங்கும் குழிகள் என்னென்ன நடக்குமோ!பாதாள சாக்கடை பணியில் தரமில்லை

Added : ஜன 11, 2020
Advertisement

பொள்ளாச்சி:'ஆரம்பமே இப்படின்னா; இனி போக, போக என்னென்ன நடக்குமோ,' என, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 170.22 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது.கடந்த, 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டப்பணி இன்னும் நிறைவு பெறாமல், இழுபறி நிலையில் ஆமை வேகத்தில் நடக்கிறது.
முறையான அறிவிப்புகள் இன்றி குழிகளை தோண்டுவது; ஒரு இடத்தில் பணிகள் முடிவதற்குள்; மற்றொரு இடத்தில் குழி தோண்டுவது; தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாதது; குடிநீர் குழாய் உடைப்பு என தினமும் பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டது முதல், இதுவரை ஆள் இறங்கும் குழிகள் தரமாக கட்டப்படுகிறதா என சந்தேகம் மக்களிடம் இருந்து வருகிறது.ஆள் இறங்கும் குழிகள் அமைப்பதற்காக, ஒரே நாளில் குழி தோண்டப்பட்டு கான்கிரீட் பணிகள் முடிந்து உடனடியாக மூடப்படுகின்றன. முறையாக தண்ணீர் ஊற்றி அவை பராமரிக்கப்படவில்லை என்ற புகார்கள் உள்ளது.திட்டப்பணிகள் முடிவதற்குள், பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகளில் இருந்து, நீர் ஊற்று போல தண்ணீர் வெளியேறியது. மேலும், பல இடங்களில் குழிகள் சேதமடைந்துள்ளன.வாகனங்கள் சென்றாலே ஆள் இறங்கும் குழிகளின் மேல் மூடிகள், உடைந்து முற்றிலும் சேதமடைகின்றன. பல இடங்களில், ஆள் இறங்கும் குழிகள் மண்ணுக்குள் உள்வாங்கியுள்ளன.பொள்ளாச்சி குமரன் நகர் ரோடு, மார்க்கெட் ரோடு, சந்தைப்பேட்டை, ஜோதிநகர், ஆர்.ஆர்.தியேட்டர் ரோடு, என பல இடங்களிலும் ஆள் இறங்கும் குழிகள் விபத்துக்கு அச்சாரம் போடுகின்றன.
ராஜாமில் ரோட்டில் சேதமடைந்த குழி அருகே பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளன. வெங்காய மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில், குழி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.பல ஆண்டுக்கு பலன் அளிக்கும் திட்டம், என கூறப்படும் சூழலில், ஆள் இறங்கும் குழிகள் தற்போதே பெயர்ந்து வருவது வேதனையானது.
பொதுமக்கள் கூறியதாவது: திட்டப்பணிகள் துவங்கி, நான்கு ஆண்டுகளாகியும் முழு அளவில் முடியாத நிலையில், ஆள் இறங்கும் குழிகள் பெயர்ந்து சேதமடைந்துள்ளன.ஆள் இறங்கும் குழிகள், விபத்து ஏற்படுத்தும் குழிகளாக மாறியுள்ளதால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.தற்போதே குழிகள் சேதமடைந்தால், பல ஆண்டுக்கு இத்திட்டம் பலன் அளிக்குமா; கழிவுநீர் முறையாக செல்லுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.கட்டப்பட்ட சில மாதங்களிலே இத்திட்ட குழிகள் பெயர்ந்து வருவது குறித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.இதனால், நகர மக்கள் சிரமப்படும் சூழல் உள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.
இனியாவது கண்காணிங்க!பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மக்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தாலும், அதிகாரிகளும், பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை.புழுதி காற்றால் சுவாசக்கோளாறு, குழியால் விபத்தில் சிக்கி மருத்துவ செலவு, மேடு பள்ள ரோட்டில் செல்வதால் வாகனப்பழுது என பல்வேறு பிரச்னைகளை மக்கள் அனுபவிக்கின்றனர்.மக்கள் பிரச்னைகளை கவனமுடன் கவனித்து, இனியாவது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.மக்களின் குமுறல்கள், நகராட்சி தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என்பதை ஆளுங்கட்சியினர் உணர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X