பொது செய்தி

தமிழ்நாடு

ஆருத்ரா தரிசனம் கோலாகலம் நடராஜர் சுவாமி திருவீதி உலா

Added : ஜன 11, 2020
Advertisement
 ஆருத்ரா தரிசனம் கோலாகலம் நடராஜர் சுவாமி திருவீதி உலா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடந்தது. இதில், பக்தர்கள் வெள்ளத்தில் பூப்பல்லக்கில் நடராஜர், சிவகாமி அம்மன் பவனி வந்து அருள்பாலித்தனர்.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு சிவகாமி அம்மன் திருஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது.காலை, 9:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும்; சிவகாமி அம்மையுடன், நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலை 6:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடக்கிறது.* பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.காசிவிஸ்வநாதர் தேவியருடன் தேரில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X