பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்டேட்களில் நுாலகம் வாசகர்கள் எதிர்பார்ப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

வால்பாறை:எஸ்டேட் பகுதியில் பகுதி நேர நுாலகம் திறக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை தாலுகாவில், உள்ள பள்ளி, கல்லுாரிகளில், ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். எஸ்டேட் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் படித்துள்ளனர்.இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் உள்ளனர். இந்நிலையில், மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில், ஒரே ஒரு நுாலகம் செயல்படுகிறது. இது தவிர சோலையார்நகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் மட்டும் பகுதிநேர நுாலகம் செயல்படுகிறது.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் நுாலகம் இல்லாததால், வாசகர்கள் வால்பாறை நகரில் உள்ள நுாலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.எனவே, முடீஸ் பஜார், கருமலை பஜார், ரொட்டிக்கடை, வாட்டர்பால்ஸ், சின்கோனா ஆகிய இடங்களில் நுாலகத்துறை சார்பில் பகுதி நேர நுாலகம் ஏற்படுத்த வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X