சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று பாதுகாப்பு கம்பி வலை திருட்டு

Added : ஜன 11, 2020
Share
Advertisement

திருவாடானை:ரோட்டோர மரக்கன்றுகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட கம்பி வலைகளை திருடுபவர்களுக்கு செருப்பை கட்டி தொங்க விட்டு எச்சரித்துள்ளனர்.திருவாடானை அருகே மங்களக்குடி- தேவகோட்டை சாலையில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்டது. இந்த மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் நைலான் வலையால் வேலி அடைக்கப்பட்டது.இரவில் சிலர் இந்த வலையை திருடிச் சென்று வீட்டில் வைத்து பயன்படுத்தி வந்தனர்.இதனால் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் எச்சரிக்கை விடும் வகையில் வேலி மேற்பகுதியில் செருப்பை தொங்க விட்டுள்ளனர். இது குறித்து ஊரணிக்கோட்டை கிராம மக்கள் கூறுகையில், மரக்கன்றுகளை பாதுகாப்பதற்காக வைக்கப்பட்ட வலைகளை சிலர் திருடிச் செல்வதால் அவர்களை எச்சரிக்கும் வகையில்அனைத்து மரக்கன்று வலைகளிலும் செருப்பை தொங்க விட்டுள்ளோம்.இனிமேலாவது திருடர்கள் திருந்த வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X