பொது செய்தி

தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து 99 இடங்களில் முகாம்

Added : ஜன 11, 2020
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சமுாதய நல கூடத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவது குறித்து, அங்கன்வாடி பணியாளர்களுக்கான கூட்டம் நடந்தது.நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். டாக்டர் முகில் வண்ணன் முன்னிலை வகித்தார். வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி வரவேற்றார்.பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வரும், 19ல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.விடுபட்ட குழந்தைகளுக்கு, 20, 21 தேதிகளில் வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதற்காக, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையம், கோவில், சினிமா தியேட்டர் உள்ளிட்ட, 99 இடங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதனை பெற்றோர்கள் பயன்படுத்தி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X