இன்று உள்ளாட்சி மறைமுக தேர்தல்! தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று உள்ளாட்சி மறைமுக தேர்தல்! தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

Added : ஜன 11, 2020
Share
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய அலுவலகங்களில், மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து கடந்த, 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒன்றியங்களில், தேர்தலில் களமிறங்கி வெற்றி வாகை சூடிய, மக்கள் பிரதிநிதிகள், 6ம் தேதி பதவியேற்றனர்.இன்று, 11ம் தேதி ஒன்றிக்குழு தலைவர், துணைத்தலைவர்,

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய அலுவலகங்களில், மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து கடந்த, 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒன்றியங்களில், தேர்தலில் களமிறங்கி வெற்றி வாகை சூடிய, மக்கள் பிரதிநிதிகள், 6ம் தேதி பதவியேற்றனர்.இன்று, 11ம் தேதி ஒன்றிக்குழு தலைவர், துணைத்தலைவர், ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில், மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், லதா பயிற்சி அளித்தனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சி கூட்டத்துக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுந்தர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பி.டி.ஓ., மோகன்பாபு முன்னிலை வகித்தார்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கான பயிற்சி கூட்டத்துக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.பி.டி.ஓ.,க்கள் பேசியதாவது: ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு, ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் மறைமுகத்தேர்தல் நடக்கும்.ஓட்டுப்பெட்டிகள், ஓட்டுச்சீட்டுகள், வேட்பு மனு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.ஊராட்சி துணைத்தலைவர் தேர்வுக்கு, ஊராட்சி தலைவரும் ஓட்டளிக்கலாம். போட்டியிடுவோர் சமமான எண்ணிக்கையில் ஓட்டுகள் பெற்றார், குழுக்கள் முறையில் துணைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X