பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், குள்ளிச்செட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கொங்கநாட்டான்புதுார் கிராமம். கிராமத்தில், 250 வீடுகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக முக்கிய இடங்களான துவக்கப்பள்ளி, கோவில் பகுதியில் தெருவிளக்குகள் எரியாத காரணத்தால், மக்கள் நடமாட முடிவதில்லை. தவிர, மயானம் செல்லும் வழியெங்கும் முள்புதர்களால் தடுக்கப்பட்டுள்ளது. மயானத்தில் தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. இரவு நேரத்தில் கெரசின் விளக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. பொள்ளாச்சி - வடக்கிபாளையம் ரோட்டில் இருந்து, ஒரு கி.மீ., துாரமுள்ள கிராமத்துக்கு இதுவரை பஸ் போக்குவரத்து இல்லை. மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ள நிலையில், ஊராட்சியில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE