அதிருப்தி: வெளி மாநில சுற்றுலாப்பயணகள்... பாம்பன் பாலத்தில் குப்பை குவியல்| Dinamalar

தமிழ்நாடு

அதிருப்தி: வெளி மாநில சுற்றுலாப்பயணகள்... பாம்பன் பாலத்தில் குப்பை குவியல்

Added : ஜன 11, 2020
Share
ராமேஸ்வரம்:பாம்பன் கடல் மீது 2.5 கி.மீ.,ல் அமைந்துள்ள பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்,ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. இந்த பாலம் வழியாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வாகனத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடிக்கு சென்று வருகின்றனர்.இப்பாலத்தில் நின்றபடி தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மன்னார் வளைகுடா தீவுகள், ரயில் பாலம்,

ராமேஸ்வரம்:பாம்பன் கடல் மீது 2.5 கி.மீ.,ல் அமைந்துள்ள பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்,ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. இந்த பாலம் வழியாக தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வாகனத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடிக்கு சென்று வருகின்றனர்.இப்பாலத்தில் நின்றபடி தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மன்னார் வளைகுடா தீவுகள், ரயில் பாலம், பாம்பன் கடல் அழகை கண்டு ரசிப்பார்கள். பிரசித்த பெற்ற இப்பாலத்தின் இருபுறமும் உணவு பொருள் கழிவுகள், பிளாஸ்டிக் பை, குப்பை குவிந்து கிடக்கிறது. சுகாதாரமற்ற நிலையும் உள்ளது. பிரசித்தி பெற்ற தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சுகாதாரக் கேடாக இருப்பதை பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். பிரதமர் மோடியின் துாய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் தீவிரமாகி வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த பாம்பன் பாலத்தில் சுகாதாரம் பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X