பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் கண்காட்சியில் 2ம் இடம்

Added : ஜன 11, 2020
Advertisement
  அறிவியல் கண்காட்சியில் 2ம் இடம்

கோவை சரவணம்பட்டி சங்கரா கல்லுாரியில், இன்ஸ்பையர் விருது மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில், பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அதில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் திவாகரின் அறிவியல் படைப்பு, (எல்.இ.டி.,யுடன் போக்குவரத்து கையுறை) இரண்டாமிடம் பெற்றது.மாணவரின் புதிய மாதிரிகள் செய்ய இப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் மகாலட்சுமி உறுதுணையாக இருந்தார். மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு மாணவர் தகுதி பெற்றார்.வெற்றி பெற்ற மாணவரை, வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சின்னப்பராஜ், சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர் கணேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாசாணிதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.வல்லிக்கண்ணன் நுாற்றாண்டுவிழாபொள்ளாச்சி,என்.ஜி.எம்., கல்லுாரி தமிழ்துறை சார்பில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் நுாற்றாண்டு விழா நடந்தது.விழாவில், பேராசிரியர் மகேஷ்வரி வரவேற்றார். தமிழ்துறை தலைவர் முத்துவேல் முன்னிலை வகித்தார். விழாவுக்கு கல்லுாரி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கோவை பேராசிரியர் சுப்ரமணியம் பங்கேற்று, சாகித்ய அகாடமி விருது பெற்ற வல்லிக்கண்ணனின் எழுத்தாற்றல், அவரது வாழ்வியல் முறை குறித்து விளக்கினார். தமிழ்துறை உதவி பேராசிரியர் அருள்ஜோதி நன்றி தெரிவித்தார்.நினைவு வாலிபால் போட்டிபொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், ஒன்பதாவது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான எஸ்.டி.சி., நிறுவனர்கள் நினைவு வாலிபால் போட்டி நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த போட்டியில், எட்டு அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறைகளில் நடந்தது. முதல் அரையிறுதி போட்டியில், திருநெல்வேலி அப்துல்ரகுமான் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவை ராகவேந்திரா மேல்நிலைப்பள்ளிகள் மோதின. இதில், ராகவேந்திரா அணியினர், 3:0 என்ற செட்களில், வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.இரண்டாவது அரையிறுதி போட்டியில், திருச்சி காஜா மியான் மேல்நிலைப்பள்ளி அணியினர், திருப்பூர் ப்ரண்ட் லைன் அகாடமி மேல்நிலைப்பள்ளி அணியினரை, 3:1 என்ற செட்களில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினர்.இறுதி போட்டியில், திருச்சி காஜா மியான் அணியினர், கோவை ராகவேந்திரா அணியை, 3:0 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.மூன்றாம் இடத்துக்கான போட்டியில், திருப்பூர் ப்ரண்ட்லைன் அணியினர், 3:1 என்ற செட்களில், திருநெல்வேலி எம்.என். அப்துல்ரகுமான் பள்ளி அணியினரை வென்றனர்.பரிசளிப்பு விழாவில், எஸ்.டி., கல்லுாரி தலைவர் விஜயமோகன், முதல்வர் சோமு முன்னிலை வகித்தனர்.தேசிய அணியின் வாலிபால் பயிற்சியாளரும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை பயிற்சியாளருமான குமரா, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.உடற்கல்வித்துறை இயக்குனர் பாரதி, தமிழக வாலிபால் சங்கத்தின் இணைச் செயலர் செல்லமுத்து, துணைத்தலைவர் ராமானுஜம் ஆகியோர் பங்கேற்றனர்.பொங்கல் விழா பட்டிமன்றம்பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி பொருளியல்துறை, உழவுபாரதம் சான்றிதழ் பாடத்திட்டம் சார்பில், பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.பட்டிமன்றத்துக்கு, பேராசிரியர் கலையமுதன் நடுவராக இருந்தார். பட்டி மன்ற பேச்சாளர்களாக பங்கேற்றவர்கள், 'சிகரங்களை நோக்கியே, சிரமங்களை நோக்கியே' என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.முன்னதாக, பொருளியல்துறை தலைவர் கிருஷ்ணதுளசிமணி வரவேற்றார்.தொழில்நெறி கருத்தரங்கம்பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மையம் சார்பில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணராஜ் வரவேற்றார்.கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் ஜோதிமணி, திட்ட விளக்கவுரை வழங்கினார்.கோவை ஜே.வி., அகாடமியின் இயக்குனர் வணங்காமுடி, வங்கியில் கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்புகள், கோவை உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் நல அலுவலர் செல்வமூர்த்தி, முப்படைகளில் கிடைக்கப்பெறும் வேலைகள் குறித்தும் விளக்கினார்.கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்ரமணியன், போட்டி தேர்வுகளுக்கு தயாராவது குறித்து விளக்கினார்.மாணவர்களுக்கு இடையே கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பொள்ளாச்சி சப் - கலெக்டர், பரிசுகளை வழங்கினார். வேலைவாய்ப்பு வழிகாட்டு கையேடு - 2020 என்னும் நுால் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மையத்தின் உதவியாளர் கார்த்திக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X