பொது செய்தி

தமிழ்நாடு

சிவலோகநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு

Added : ஜன 11, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு முதல் கால வேள்வியும், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும் நடந்தது.அதிகாலை, 4:00 மணிக்கு நடராஜர் சுவாமிக்கு, பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் போன்ற பொருட்களால் அபிேஷக வழிபாடு நடந்தது.காலை, 6:30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடராஜர் சுவாமியை வழிப்பட்டனர்.விரதமிருந்த சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X