பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வருவாய் அலுவலரை மாற்றக்கோரி 3வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

Added : ஜன 11, 2020
Advertisement

ராமநாதபுரம்:மூன்றாவது நாளாக இவர்களின் போராட்டம் நீடித்ததால் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி. இவர் பணியாளர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி சில மாதங்களாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தொடர் மருத்துவ விடுப்பில் சென்றார்.

கடந்த டிச.11ல் நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியின் பணிக்காலத்தில் நடந்த நிர்வாக சீர்கெடுகளை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் மீண்டும் பணியேற்க வந்தால் பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஜன.8ல் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி அலுவலகம் வந்து வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்ததால் வருவாய்துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X