சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காந்தி மார்க்கெட் வளாகத்தில் வாகன கழிவுகளில் தீ விபத்து

Added : ஜன 11, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு பகுதியில், குவிக்கப்பட்டுள்ள வாகன கழிவுகளில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில், தோல் சந்தை நடைபெறும் இடத்தில், வாகன ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளன.அந்த இடத்தில், பழைய வாகனங்களின் உடைக்கப்பட்ட கழிவுகள், வாகன சீட் கவர்கள், பஞ்சுகள் போன்றவை குவிக்கப்பட்டுள்ளன. இவை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் கழிவுகளின் கூடாரமாக அந்த இடம் மாறியுள்ளது. நகராட்சி சுகாதாரத்துறை மூலம் அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால், கழிவுகள் தேங்கி கிடக்கிறது.இந்நிலையில், நேற்று மாலை திடீரென மரத்தின் கீழ் கொட்டப்பட்டு இருந்த கழிவுகளில் தீ பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் உடனடியாக தீயை அணைத்து, வேகமாக பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.பொதுமக்கள் கூறியதாவது:கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த கூறியும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நகராட்சி நிர்வாகம் பல நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X