பொது செய்தி

தமிழ்நாடு

பரத நாட்டியத்தில் கலக்கும் ராமேஸ்வரம் மாணவிகள்

Added : ஜன 11, 2020
Advertisement

ராமநாதபுரம்குழந்தைகளின் குறும்புத்தனத்தை கண்டு பெற்றோர் மகிழ்வார்கள். அதே குழந்தைகள்பள்ளி படிப்புடன் மற்றொரு துறையில் சிறந்து விளங்கினால், அக்கம் பக்கத்து வீட்டில் பெருமையாக சொல்லி உற்சாகம் அடைவார்கள்.ராமேஸ்வரம் இத்திதெருவில் வசிக்கும் புரோகிதர்களின் குழந்தைகள் ஸ்ரீவைஷ்ணவி,அமிர்தவர்ஷினி, சைதன்யா பரத்வாஜ், ஐஸ்வர்யலெட்சுமி. இவர்கள் 6 மற்றும் 8 ம் வகுப்பில் படிக்கின்றனர். 2ம் வகுப்பு படிக்கும் போதே பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்டனர். பெற்றோர் கிரீன் சிக்னல் காட்டியதும் ராமநாதபுரத்தில் அரசு சார்ந்த ஜவஹர் சிறுவர் மன்றத்தில் முறைப்படி பரதம் கற்றனர். இன்று சென்னை, கோவை, புதுச்சேரி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல பகுதியில் கோயில் திருவிழா, அரசு விழாக்கள், தனியார் ஆன்மிக விழா மேடையில் இம்மாணவிகளின் யோகாவுடன் கூடிய பரத நாட்டியம் மற்றும் நாட்டிய நாடகத்தில் அசத்தி விழாவை களைகட்ட செய்கின்றனர்.இவர்களை தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுதுறை, பல தனியார் அமைப்புகள் பாராட்டி சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கியுள்ளது. பரத நாட்டியத்தில் தேசிய அளவில் சாதிக்க விரும்பும் இந்த மாணவிகளின் லட்சயத்திற்கு பெற்றோரும் ஒத்துழைக்க தயாராக உள்ளனர். ஸ்ரீவைஷ்ணவியின் தாய் ரம்யா 'சிறுவயதில் பரதம் கற்பதற்கு அடம் பிடித்த என் மகள் விருப்பத்திற்கு நான் தடை போடவில்லை. இன்று பல மேடையில் பரதத்தில் மகளுடன், என் உறவு குழந்தைகளும் கலக்குகிறார்கள். பரத நாட்டியத்தில் மேலும் சாதிக்க ஜவஹர் சிறுவர் மன்றமும், நாங்களும் துணை நிற்போம்,' என்றார். பரத நாட்டிய லட்சியப் பயணம் வெற்றி பெற வாழ்த்த 90805 08418.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X