பொது செய்தி

தமிழ்நாடு

சட்டக்கல்லுாரி மாணவர்

Added : ஜன 11, 2020
Advertisement

முதுகுளத்துார்

முதுகுளத்துார் பகுதி கிராம கோயில் திருவிழாக்களின் போது வடமாடு, மஞ்சுவிரட்டு வழக்கமாக நடப்பதோடு கிடா சண்டையும் நடத்தப்படுகிறது.முதுகுளத்துார் பகுதியை சேர்ந்த திருமாறன் 20. சட்ட கல்லுாரியில் படிக்கிறார். இவரது வீட்டில் சண்டை கிடாக்கள், சேவல் வளர்ப்பதோடு மாடு பிடிக்கவும் பயிற்சி அளிக்கிறார். இனி அவர்....சண்டை கிடா குட்டியில் இருந்து வளர்த்து வந்தால் மட்டுமே போட்டிக்கு சாதகமாக இருக்கும்.கிடாக்களுக்கு அதிகாலை, மாலை நேரங்களில் முறையான பயிற்சியும், வெயில் நேரத்தில் ஓய்வு எடுக்க வைத்து பின்பு தண்ணீரில் நீச்சல்பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் பாதாம் பருப்பு, பால், முட்டை, கரும்பு, சோளம், உளுந்து, பச்சரிசி, பருத்தி விதை, கொள்ளு உணவாக அளிப்படுவதால் உடலில் கொழுப்பு சேருவதில்லை.ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று தங்ககாசு, குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளேன். போட்டிகள் இல்லாத நேரத்தில் வெளியூர் கிடாக்களுக்கும்பயிற்சி அளிக்கிறேன்.பாரம்பரிய போட்டிகளைஅழியாமல் பாதுகாக்க இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும், என்றார்.வளர்ந்த கிடாக்கள் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விலை போகிறது.இவரை பாராட்ட 9655861067.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X