பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை பேச்சு போட்டியில் அரசு கல்லுாரி முதலிடம்

Added : ஜன 11, 2020
Advertisement

பரமக்குடி:அழகப்பா பல்கலை அளவில் நடந்த பேச்சுப் போட்டியில் பரமக்குடி அரசு கல்லுாரி மாணவி முதலிடம் பெற்றார்.அழகப்பா பல்கலையின்கீழ் இயங்கும் தேவகோட்டைசேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் கட்டுரை, சிறுகதை, பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் அழகப்பா பல்கலையின்கீழ்இயங்கும் அனைத்து கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி தமிழ் உயராய்வு மையத்தில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி காயத்ரி பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். இம்மாணவிக்குரூ.1500 ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பரமக்குடியில் கல்லுாரி முதல்வர் பூரணச்சந்திரன் தலைமை யில் பாராட்டு விழா நடந்தது.தமிழ்த்துறைத் தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர்கள் சிவக்குமார்,கண்ணன், மணிமாலா, ரேணுகாதேவி, செந்தில் குமார், விஜயகுமார், ஆஷா, மோகன கிருஷ்ணவேணி உட்பட பேராசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X