பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் மத்திய கேந்திர வித்யாலயா பள்ளிக்கு புதிய கட்டடம்

Added : ஜன 11, 2020
Advertisement

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் மத்திய கேந்திர வித்யாலயா பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்கும், என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரீயால் தெரிவித்தார்.கடந்த 2002ல் ராமேஸ்வரத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு ஒதுக்கிய ரூ.40 லட்சத்தில் 8.55 ஏக்கர் நிலத்தை வாங்கியதால், புதிய கட்டடத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இதனால் நகராட்சி கட்டடத்தில் வகுப்பறைகள் செயல்பட்டதால் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரீயால் நேற்று ராமேஸ்வரம் வந்தார். அவர், கலெக்டர் வீரராகவராவ், பா.ஜ.,மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோருடன் மத்திய பள்ளிக்கான இடத்தை ஆய்வு செய்தார். உடனே அலைபேசியில் உயர் அதிகாரியை தொடர்பு கொண்ட அமைச்சர், புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்க மத்திய கல்வித்துறை உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டார். பின்னர் மத்திய அமைச்சர் கூறியதாவது :ராமேஸ்வரம் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு வாங்கிய 8.55 ஏக்கரில் வகுப்பறை, ஆசிரியர் குடியிருப்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய கட்டடப் பணிகள் விரைவில் துவங்கும். தமிழக அரசு ஒத்துழைத்ததால் தமிழகத்தில் பல பகுதியில் நவோதயா பள்ளிகள் துவக்கப்படும், என்றார்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X