பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு குளிர் கால ஆடைகள்

Added : ஜன 11, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:பில்லுார் அணைப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்கும், சிறுவர்களுக்கும், காவல்துறை சார்பில் குளிர்கால ஆடைகள் வழங்கப்பட்டன.பில்லுார் அணைப்பகுதியில் வீரக்கல், பரளிக்காடு, நீராடி, கோரப்பதி, கீழ்பில்லுார், மேல்பில்லுார், நெல்லிமரத்துார், பூச்சிமரத்துார், சிறுகிணறு, தோண்டை, அத்திக்கடவு உள்பட, 15க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. தற்போது, பனிப்பொழிவு அதிகளவில் இருப்பதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிராலும், காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார் உத்தரவின் பேரில் மலைக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும், சிறுவர்களுக்கும் குளிர்கால ஆடைகள் வழங்கப்பட்டன.இந்தாண்டு இதேபோல் ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வேலு தலைமையில் கோவை மாவட்ட காவல்துறை, நக்சல் தடுப்பு பிரிவு உடன் இணைந்து, 170 மலைவாழ் கிராம மக்களுக்கு கம்பளி, போர்வை மற்றும் பனிகுல்லா வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X