பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மகசூலுக்கு உதவும் உரக்கலவை

Added : ஜன 11, 2020
Advertisement

சூலுார்:'தென்னையில் அதிக மகசூல் பெற, உரக்கலவை இடுவது அவசியம்' என, வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.சூலுார், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாகும். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, போதிய மழை யில்லாததால், தென்ன வளர்ப்பு பாதிக்கப்பட்டிருந்தது. வறட்சியால்,மரங்கள் தாக்குப்பிடிக்காமல் காய்ந்து, காய்ப்பு திறனை இழந்தன.இந்தாண்டு பருவ மழை ஓரளவுக்கு கை கொடுத்ததால், தென்னை விவசாயத்தில் விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர். தற்போது, தேங்காய் மற்றும் கொப்பரைக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தென்னையில் அதிக மகசூல் பெற, உரக்கலவை இட வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.வேளாண் அதிகாாரிகள் கூறுகையில், 'தொழு உரம், 50 கிலோ, யூரியா, 1.2 கிலோ, வேப்பம்புண்ணாக்கு ஒரு கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ், 3 கிலோ, ஜிப்சம், 2 கிலோ, மெக்னீசியம் சல்பேட், 500 கிராம், தென்னை நுண்ணுாட்டம் ஆகியவற்றை கலந்து உரக்கலவை தயாரிக்க வேண்டும்.அக்கலவையை இரு பங்காக பிரித்து, மரத்தை சுற்றி, மூன்றரை அடி தள்ளி, வட்டமாக குழி எடுத்து அதில் இடவேண்டும். இவ்வாறு செய்வதால், அதிக மகசூல் பெறலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X