பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் தேர்தல்: தி.மு.க.,வேட்பாளர்கள்

Added : ஜன 11, 2020
Advertisement

ராமநாதபுரம்:ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜன.3ல் அறிவிக்கப்பட்டு ஜன.6ல் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.தி.மு.க., மறைமுக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேட்பாளராக திசைவீரன், துணை தலைவர் வேட்பாளராக காங்., வேலுச்சாமி போட்டியிடுகின்றனர்.

ஒன்றிய குழு தலைவர்களுக்கு திருவாடானை-முகம்மது முக்தார், ஆர்.எஸ்.மங்கலம்-ராதிகா, திருப்புல்லாணி-புல்லாணி, மண்டபம்-சுப்புலட்சுமி, கடலாடி-பார்வதி, கமுதி-தமிழ்செல்வி, நயினார்கோவில்-இளவரசி, பரமக்குடி-கலைச்செல்வி, போகலுார்-சத்யா, ராமநாதபுரம்-மனோகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X