பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் முதல் குடிநீர் திட்டம் திடீர் நிறுத்தம்? மாநகராட்சி அறிவிப்பால் அதிர்ச்சி

Added : ஜன 11, 2020
Advertisement

அன்னுார்:'திருப்பூர் முதலாம் குடிநீர் திட்டம் நிறுத்தப்படும்' என, மாநகராட்சி அறிவித்திருப்பது அன்னுார் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அன்னுார், அவிநாசி, திருப்பூருக்கு, திருப்பூர் முதலாம் குடிநீர் திட்டம், இரண்டாம் குடிநீர் திட்டம், வழியோர கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு, மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து, தினமும், 20 கோடி லிட்டர் நீர் சப்ளை செய்யும் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.இந்தத் திட்டத்திற்காக, 1,000 மி.மீ., சுற்றளவு கொண்ட ராட்சத குழாய்கள் ரோட்டில் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழாய்கள் பதிக்கும் போது, திருப்பூர் முதலாம் குடிநீர் திட்ட குழாய்கள் உடைந்தன. இதனால் குருக்கிளையம்பாளையம், அன்னுார் நகரில் மூன்று இடங்கள், ஊத்துப் பாளையம் ஆகிய இடங்களில் சப்ளை செய்யப்பட்டு வந்த திருப்பூர் முதலாம் குடிநீர் திட்ட பொது குழாய்களில், மூன்று மாதங்களாக குடிநீர் வருவது இல்லை.10 நாட்களுக்கு...அன்னுார் நகரில், குடிநீர் 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் குடிநீர் இணைப்பு இல்லாதவர்களுக்கும் வீட்டில் சப்ளையாகும் நீர் போதாதவர்களுக்கும், திருப்பூர் முதலாம் திட்ட குடிநீர் குழாய் தான் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.முதலாம் குடிநீர் திட்டத்தில் தினமும், 16 மணி நேரம் நல்ல முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வேகமாக சப்ளையாகி வந்தது. கடந்த மூன்று மாதங்களாக இது நிறுத்தப்பட்டது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சியிடம், பொது மக்களும் பல்வேறு அமைப்புகளும் புகார் செய்தனர்.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், திருப்பூர் மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், 'திருப்பூர் முதல் குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டு விடும்' என, தெரிவித்துள்ளது. இது, அன்னுார் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போராட்டம் நடத்த முடிவு!பொதுமக்கள் கூறியதாவது:அன்னுார் நகரில் குடிநீர் கிடைக்காமல் திண்டாடும் மக்களுக்கு மூன்று பொது குழாய்கள் தான் உதவி வருகின்றன. மேலும் ஊத்துப் பாளையத்தில் உள்ள பொது குழாய் சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் பயன் தந்து வருகிறது.இந்நிலையில் முதலாம் குடிநீர் திட்டத்தை நிறுத்தும் மாநகராட்சியின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஐந்து பொது குழாய்களுக்கு இணைப்பு கொடுத்து மீண்டும் வழக்கம்போல் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X