பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் வசதியின்றி பரிதவிக்கும் மாணவர்கள்: கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

Added : ஜன 11, 2020
Advertisement
 பஸ் வசதியின்றி பரிதவிக்கும் மாணவர்கள்: கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்:போதிய பஸ் வசதி இல்லாததால், மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.மேட்டுப்பாளையம், மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், காரமடை, மேட்டுப்பாளையம் சாலை வழியாக வருபவர்கள், குட்டையூரிலிருந்து 3 கிலோ மீட்டர் துாரமும், அன்னுார் சாலையிலிருந்து ஐஸ்வர்யா நகர் வழியாக வருவோர், 1 கி.மீ., துாரமும், கல்லுாரிக்கு நடந்து வந்தனர்.கல்லுாரி நிர்வாகமும், மாணவர்களும் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த ஆண்டு நவ., மாதம் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு கல்லுாரிக்கு சென்று வர, இரண்டு பஸ்களை இயக்கினர்.ஆரம்பத்தில் இரு பஸ்களை இயக்கிய அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள், கடந்த, 15 நாட்களாக, ஒரு பஸ்சை மட்டுமே இயக்குகின்றனர். இதனால் கல்லுாரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு, ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டியுள்ளது.கல்லுாரி மாணவர்கள் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து காலையில் இரு பஸ்களையும், மதியம் இரு பஸ்களையும் இயக்குவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தற்போது காலையில் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் அனைத்து மாணவர்களும் வர முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் நாங்கள் குட்டையூரில் இருந்து கல்லுாரி வரை நடந்து தான் வருகிறோம். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லுாரிக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துறை அதிகாரிகள் இரு பஸ்களை இயக்க வேண்டும்' என்றனர்.அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஏன் ஒரு பஸ்சை நிறுத்தினார்கள் என்பது குறித்து விசாரணை செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X