அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய துணை சேர்மன் பதவி அ.தி.மு.க., கூட்டணியில் போட்டி

Added : ஜன 11, 2020
Advertisement

அன்னுார்:அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், துணை சேர்மன் பதவிக்கு, கடும் போட்டி நிலவுகிறது.அன்னுார் ஒன்றியத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், ஒன்றிய சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவது என, தீர்மானித்துள்ளனர். ஆனால், துணை சேர்மன் பதவிக்கு பல நாட்கள், பல மணி நேரம் பேச்சு நடத்தியும் யாருக்கு என, முடிவு ஏற்படவில்லை.அ.தி.மு.க.,வில் பிரபு, பா.ஜ., சார்பில் ஜெயபால், தே.மு.தி.க., சார்பில் கீதா ஆகியோரும், இரு சுயேச்சை வேட்பாளர்கள் இந்திராணி, லோகநாயகி ஆகியோரும் துணை சேர்மன் பதவி கேட்டு போராடி வருகின்றனர். இதில், நேற்று மாலை வரை முடிவு ஏற்படாததால், அ.தி.மு.க., நிர்வாகிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க., தரப்பில், தங்கள் அணிக்கு வரும் ஒன்றிய கவுன்சிலருக்கு, துணை சேர்மன் பதவி தரப்படும் என, தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க., அணியில் சிக்கல் உருவாகியுள்ளது. இன்று காலை சேர்மன் தேர்தல் முடிந்தவுடன், துணை சேர்மன் பதவி யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அ.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X