எமதர்மர் கோவிலில் பவுர்ணமி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எமதர்மர் கோவிலில் பவுர்ணமி பூஜை

Added : ஜன 11, 2020

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே உள்ள எமதர்மர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.சிறுமுகை அடுத்த சென்னம் பாளையத்தில் எமதர்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக எமதர்மரும், கோவில் வளாகத்தில் காலகாலேஸ்வரர் இன்ப விநாயகர் ஆகிய சுவாமி சன்னிதிகள் உள்ளன.நேற்று பவுர்ணமியை அடுத்து அதிகாலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு எமதர்மர் இன்பவிநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X