பொது செய்தி

தமிழ்நாடு

நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் திருவீதி உலா

Added : ஜன 11, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்சவம் நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை அடுத்து ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. நான்காம் நாளில் பெருமாள் நரசிம்ம அவதாரத்தில், வெள்ளி சப்பரத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து, சொர்க்கவாசல் வழியாக திருக்கோவிலில் அவரோகண மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு கோவில் ஸ்தலத்தார்கள் திருமலை நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாச பட்டர் ஆகியோர் திவ்ய பிரபந்த திருவாய்மொழிப் பாசுரங்களை சேவித்தனர். கோவில் அர்ச்சகர்கள் வேத பாராயணம் சேவித்தனர். பின்பு ஆராத்தி எடுத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X