இரு அணிகளிலும் சமபலம் ஊராட்சி தலைவர்கள் புலம்பல்

Added : ஜன 11, 2020
Advertisement

சூலுார்:ஊராட்சிகளில் அலுவலங்களில் துணைத்தலைவர் தேர்தல் நடத்த, தேர்தல் அலுவலர்கள் தயாராகி உள்ளனர்.சூலுார் வட்டாரத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் புதிய தலைவர்களும், 171 வார்டு உறுப்பினர்களும் கடந்த, 6ம் தேதி பதவி ஏற்றனர். துணைத் தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது. இதற்கான, முன்னேற்பாடுகள் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்திய அலுவலர்கள், வேட்புமனுக்கள், வெற்றி பெற்ற ஊராட்சி உறுப்பினர்கள் பட்டியல் ஆகியவற்றை சரிபார்த்து பெற்று சென்றனர்.ஒரு சில ஊராட்சிகளில், வெற்றி பெற்ற தலைவரின் அணி சார்பில் வென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், துணைத்தலைவர் தேர்தலில் சிக்கல் இல்லை. பெரும்பாலான ஊராட்சிகளில், இரு அணிகளிலும் சமபலம் இருப்பதால், துணைத்தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும்.நம் அணியில் நின்று வென்ற நபர், தற்போது அந்த அணிக்கு சென்று விட்டாரே என்ற புலம்பல் இரு தரப்பிலும் எழுந்துள்ளது. காலையில் இருந்து போன் செய்கிறேன், நான் அங்கே இருக்கிறேன்; இங்கே இருக்கிறேன் என, சொல்கின்றனரே தவிர நேரில் பார்க்க முடியவில்லை என, வெற்றி பெற்ற தலைவர்கள் சிலர் புலம்பினர்.தலைவர்களின் அணியை சேர்ந்தவர்கள், துணைத்தலைவர்களாக வந்தால், நிர்வாகம் சுமூகமாக நடக்கும். இல்லையென்றால் நாள்தோறும் குளறுபடிதான் இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X