பொது செய்தி

தமிழ்நாடு

ஆருத்ரா தரிசனம்... பக்தர்கள் பரவசம்!

Added : ஜன 11, 2020
Share
Advertisement
ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.மார்கழி மாதம் இறைவனுக்கு உகந்த மாதம். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு களி, கூட்டு செய்து நைவேத்தியம் படைப்பது விசேஷமானது. இந்த நாளில் இறைவனை வழிபட்டால், மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு
 ஆருத்ரா தரிசனம்... பக்தர்கள் பரவசம்!

ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.மார்கழி மாதம் இறைவனுக்கு உகந்த மாதம். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு களி, கூட்டு செய்து நைவேத்தியம் படைப்பது விசேஷமானது. இந்த நாளில் இறைவனை வழிபட்டால், மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. அதிகாலை, 5:45 மணிக்கு நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் அபிஷேகம் துவங்கியது. முதலில் பஞ்ச கவ்யம், அடுத்து மா பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், இளநீர், கரும்பு சாறு, தயிர், மாதுளை முத்து, வெட்டி வேர், மலர், சங்கு மற்றும் கடைசியாக கலச தீர்த்தம் என, 33 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.காலை, 5:45 மணிக்கு துவங்கி, 7:45 மணிக்கு அபிஷேகம் முடிந்தது. அன்னுார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* சூலுார் வைத்தியநாத சுவாமி கோவிலில், நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது. தேர் வீதி வழியாக சுவாமி புறப்பாடு நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம், பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.* பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் நடராஜர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு கலச பூஜைகள் நடந்தன.சுந்தரமூர்த்தி நாயனார், நடராஜர் சார்பில் சிவகாமியிடம் துாது செல்லும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து நடராஜர்,- சிவகாமி அம்பாள் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் பக்தர்களுக்கு தரிசனம் தரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.* மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளிங்கிரி ஆண்டவருக்கும், மனோன்மணி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிவன்புரம் ஆசிரியர் காலனியில் உள்ள ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவிலில், பிரகல்யா நாயகி சமேத பிரகதீஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு நேற்று காலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X