நரகமாக மாறிய நகரம்!வாகன ஓட்டிகள் கலக்கம்| Dinamalar

நரகமாக மாறிய நகரம்!வாகன ஓட்டிகள் கலக்கம்

Added : ஜன 11, 2020 | கருத்துகள் (1)

அன்னுார்:அன்னுார் நகரில் முக்கியமான அனைத்து ரோடுகளிலும் பணி பாதியில் நிற்பதால் மக்கள் தவித்து வருகின்றனர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு நான்காம் குடிநீர் திட்டத்திற்காக பெரிய அளவிலான குழாய்கள் பதிக்க குழிகள் தோண்டப்பட்டன. தோண்டப்பட்ட இடங்களில் மேல் பகுதியில் தார் ரோடு போடப்படவில்லை.அன்னுார் - மேட்டுப்பாளையம் ரோட்டில் 3 கி.மீ., துாரத்திற்கும், அன்னுார் அவிநாசி ரோட்டில், 3 கி.மீ., துாரத்திற்கும், 12 அடி அகலத்திற்கு ரோடு போடப்படாமல் ஜல்லியை பரப்பியுள்ளனர்.இதே போல் அன்னுார் - அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தென்னம்பாளையம் ரோடு, கோவை ரோடு, ஓதிமலை ரோடு ஆகியவற்றில் ரோட்டை தோண்டி போட்டுள்ளனர்.அன்னுார் நகரில் முக்கியமான எந்த ரோட்டில் சென்றாலும் கடும் புழுதி புயல் ஏற்படுகிறது. ரோட்டை தோண்டி வைத்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ரோடு போட நடவடிக்கை இல்லை. குடிநீர் வடிகால் வாரியம், திருப்பூர் மாநகராட்சி, அன்னுார் பேரூராட்சி என அனைத்து அலுவலகங்களிலும் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X