பொது செய்தி

இந்தியா

உ.பி., பஸ் விபத்து : பலியானவர்களுக்கு மோடி இரங்கல்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : உ.பி.,யின் கனோஜ் பகுதியில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.





கனோஜ் மாவட்டத்தின் நெடுஞ்சாலைப் பகுதியில் பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் பஸ்சில் ஏற்பட்ட தீயில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்சில் 50 பேர் வரை சென்றதாகவும், 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.





இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், உ.பி.,யில் கனோஜில் நடந்த கொடூரமான சாலை விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202009:05:30 IST Report Abuse
Mani . V இரங்கல் தெரிவித்து இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
12-ஜன-202007:13:53 IST Report Abuse
ashak வருந்தத்தக்க செய்தி, இறைவன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மன அமைதியையும் தைரியத்தையும் வழங்குவானாக, நேருக்கு நேர் மோதிக்கொண்டது என்றால் இருவழி சாலையாக இருக்க வாய்ப்பு அதிகம், மாட்டுக்கு காட்டும் அக்கரையில் கொஞ்சமாவது மனிதனுக்கு காட்டினால் இருவழிசாலைகள் போடப்பட்டு இந்த விபத்து தடுக்கப்பட்டு இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
11-ஜன-202012:34:19 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பிரதமர் வருத்தம் தெரிவித்ததற்கான காரணம் 1 அது உத்திரபிரதேசம். 2 அது சொகுசு பஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X