ஈரோடு: உள்ளாட்சிகளில் இன்று, மறைமுக தேர்தல் நடக்கிறது. பிரச்னையை தவிர்க்க சில யூனியன்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், இன்று நடக்கும் மறைமுக உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட பஞ்., தலைவர், துணை தலைவர், 14 யூனியன் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் மற்றும், 225 பஞ்., துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், ஈரோடு மாவட்ட பஞ்., தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. யூனியன்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு, மனுத்தாக்கல் செய்து, தேர்வு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட பஞ்., கவுன்சிலர்கள், 19ல் 14 பேர் அ.தி.மு.க., கூட்டணி, ஐவர் தி.மு.க., கூட்டணியில் உள்ளதால், தலைவர், துணை தலைவர் தேர்வில் பிரச்னை எழாது. யூனியன்களில் கோபி, அம்மாபேட்டை, நம்பியூர், பவானி, மொடக்குறிச்சி, பவானிசாகர், அந்தியூர், பெருந்துறை ஆகிய எட்டு யூனியன்களில் அ.தி.மு.க.,வினர் தலைவர், துணை தலைவராவார்கள். கொடுமுடி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம், சென்னிமலை, தாளவாடி யூனியன்களில், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் தலைவர், துணை தலைவராவார்கள். ஈரோடு யூனியனில், இரு அணியினரும் சமமாக உள்ளதால், பேசி தீர்ப்பார்கள். ஆனாலும் ஈரோடு, கொடுமுடி, சத்தி, டி.என்.பாளையம், சென்னிமலை, தாளவாடி யூனியன்களில், பிரச்னையை தவிர்க்க, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE