பொது செய்தி

தமிழ்நாடு

மல்லிகை பூ விலை ரூ.3,368: சத்தியில் ஓராண்டுக்கு பின் உச்சம்

Added : ஜன 11, 2020
Advertisement

சத்தியமங்கலம்: சத்தி பூ மார்க்கெட்டில், ஓராண்டுக்குப் பின், மல்லிகை பூ விலை, 3,000 ரூபாயை கடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு மாதமாக கடும் பனிபொழிவால், பூக்களின் வரத்து குறைந்தது. அதே சமயம் உரிய விலையும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களாக சுற்று வட்டார திருவிழாக்களால், பூக்களின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்தது. சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ மல்லிகை பூ, 1,820 ரூபாய்க்கு விற்றது. நேற்று ஒரே நாளில், 1,548 ரூபாய் விலை உயர்ந்து, 3,368 ரூபாய்க்கு விலை போனது. கடந்த ஆண்டு ஜன., மாதம், ஒரு கிலோ மல்லிகை பூ, 3,850 ரூபாய்க்கு விற்றது. அதன் பின் நேற்றுதான், 3,000 ரூபாயை கடந்தது. அதேசமயம் முல்லை பூ கிலோ, 1,120 ரூபாய், காக்கடா, 1,325 ரூபாய், கனகாம்பரம், 550 ரூபாய், ஜாதிமல்லி, 650 ரூபாய், செண்டுமல்லி, 77 ரூபாய், சம்பங்கி, 40 ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X