பொது செய்தி

தமிழ்நாடு

நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளாட்சி தலைவர்களுக்கு யோசனை

Added : ஜன 11, 2020
Advertisement

ஈரோடு: கிராம பஞ்., டேங்க் ஆப்பரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகம், கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி கிடைக்க வேண்டிய நிதி மற்றும் உரிமைகளை பெற்று, ஊரக பகுதி மக்களின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். பஞ்சாயத்து டேங்க் ஆப்பரேட்டர், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணிக்கொடை, வாரிசு அடிப்படையிலான பணி நியமனம் போன்ற நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X