பல்லாங்குழி சாலைகளால் பெருந்துறையில் தவிப்பு; போராட்டம் நடத்த முடிவு

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னிமலை: பெருந்துறை ஒன்றிய ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. ஜெயபாரதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் சின்னசாமி, கம்யூ., நகர செயலாளர் அருணாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெருந்துறையில் பாதாளச் சாக்கடை திட்டம், மின்சார கேபிள் அமைக்க தோண்டப்பட்ட குழிகளால், பழைய பஸ் ஸ்டாண்ட் சாலை, குன்னத்தூர் சாலை, கோவை பிரதான சாலை, ராஜவீதி, சென்னியவலசு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், பல மாதங்களாக சீரமைக்கவில்லை. குண்டு, குழியாக உள்ள சாலைகள், போக்குவரத்துக்கு இடையூறாகி, விபத்துக்கு காரணமாகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில், சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையேல் வரும், 20ல் பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X