சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் பலாத்கார முயற்சி: வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

Added : ஜன 11, 2020
Advertisement

திருச்சி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் கைதானவருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கம் கோகுலத் தெருவைச் சேர்ந்தவர் ஹேமலதா, 27. இவர் கடந்த, 2018ம் ஆண்டு அதே தெருவில் வசித்த உறவினரை பார்க்க சென்றார். அப்போது அங்கு இருந்த, அதேபகுதியைச் சேர்ந்த கதிரேசன், 28, ஹேமலதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் கதிரேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து, நேற்று, நீதிபதி மணிவாசகன் தீர்ப்பளித்தார். அதில், கதிரேசனுக்கு, இரு ஆண்டு சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட ஹேமலதாவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X