சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்சோவில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது

Added : ஜன 11, 2020
Advertisement

திருச்சி: சிறுமியை திருமணம் செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். திருச்சி, முசிறி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, 45. இவர் அதேபகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, திருமணம் செய்வதாக அழைத்துச் சென்றுள்ளார். வெளியூர் அழைத்துச் சென்ற அவர், அங்குள்ள கோவிலில் திருமணம் செய்துள்ளார். பின் சிறுமியின் பெற்றோரிடம் விட்டு விட்டார். சிறுமியின் வாழ்க்கைக்கு பிரச்னை வரும் என்று நினைத்து, பெற்றோர் இப்பிரச்னையை பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அவரது உறவினர்கள் சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டது. இதுகுறித்து சைல்டுலைன் அமைப்பினர் முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தில் கந்தசாமி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கந்தசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, திருச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக், கலெக்டர் சிவராசுவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கந்தசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X