சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல்

Added : ஜன 11, 2020
Advertisement

திருச்சி: துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரிடம், கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தாமரைச்செல்வன், 24, என்பவர், தன் உடமைக்குள், 4.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 110 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தாமரைச்செல்வனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், நேற்று முன்தினம் மாலை, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதில் பயணம் செய்ய வந்த பயணி ஒருவர், தனது உடமைக்குள் வைத்து, 7.8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X