சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாரில் விற்ற போலி மதுவை குடித்த இருவர் பரிதாப பலி

Added : ஜன 11, 2020
Advertisement

திருச்சி: துறையூர் அருகே, பாரில் விற்ற மதுவை வாங்கிக் குடித்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி, துறையூர் அருகே, கண்ணனூரைச் சேர்ந்தவர்கள் சரவணன், 30, சதீஷ், 35, தாமோதரன், 55. மூவரும், நேற்று காலை, 9:00 மணிக்கு, கண்ணணூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டியுள்ள, பாரில், மது வாங்கி குடித்துள்ளனர். இந்த பார், மதியம், 12:00 மணிக்கு தான் திறக்கப்பட வேண்டும். ஆனால், 24 மணி நேரமும் இங்கு சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. பின், மீண்டும் தாமோதரன் மது வாங்கி வந்து, அதையும் குடித்துள்ளனர். குடித்து முடித்த பின், சதீஷ் பெரம்பலூருக்கு கூலி வேலைக்கு சென்று விட்டார். கடை வீதியில் பேசிக் கொண்டிருந்த சரவணன், வீட்டுக்கு செல்லும் வழியில், அங்கிருந்த சைக்கிள் கடையில் படுத்து விட்டார். அப்பகுதியினர் எழுப்பியபோது, மயங்கிய நிலையில் இருந்த அவர், சிறிது நேரத்தில் இறந்தார். அதே பகுதியில், வேறு ஒரு கடையில், தாமோதரன் நினைவிழந்து கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாமோதரன், சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து, பெரம்பலூருக்கு வேலைக்கு சென்ற சதீஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக வாந்தி எடுத்து, துறையூர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X