பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்தியை கட்டாயப்படுத்தக் கூடாது: வெங்கையா

Added : ஜன 11, 2020
Advertisement

திருச்சி: ''தேவைப்படுவோர், ஹிந்தி படிக்கலாம். ஆனால், அதை படிக்க கட்டாயப்படுத்த கூடாது,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
திருச்சி தேசிய கல்லூரி நூற்றாண்டு விழா, நேற்று, கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று, பல்கலை அளவில் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

பின், கல்லூரியின் நூற்றாண்டு நினைவு தபால் தலையை வெளியிட்டு, அவர் பேசியதாவது: உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, தமிழகத்தில், 46.9 சதவீதமாக உள்ளது. இது நாட்டின் சராசரியை விட, மிக அதிகம். உலக அளவிலான பல்கலைகள் வரிசையில், முதல், 300 இடங்களில், இந்தியாவில் இருந்து எந்த பல்கலையும் இல்லை என்பது, வேதனை அளிக்கிறது. அனைத்து மொழிகளும் கற்க வேண்டும். தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஹிந்தி தேவைப்படுவோர் படிக்கலாம். ஆனால், அதை படிக்க கட்டாயப்படுத்த கூடாது. யோகா என்பது, நம் நாட்டின் கலாசார கலை. அதை யார் வேண்டுமானாலும் கற்கலாம். அது உடல் நலனுக்கான விஷயம். அதை, எந்த மதத்துடனும் தொடர்புபடுத்த கூடாது. யோகாவின் அருமை தெரிந்து தான், உலகில், 170க்கும் மேற்பட்ட நாடுகள் யோகாவை பின்பற்றி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தமிழக சுற்றுலா அமைச்சர் நடராஜன், தேசிய கல்லூரி நிர்வாகக்குழு துணைத் தலைவர் ஜேகர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X