பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை:முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை

Added : ஜன 11, 2020
Advertisement

வேலூர்: ''இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்,'' என, இலங்கை வடமாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் கூறினார்.
வேலூர், ஊரிசு கல்லூரியில் தமிழ்ச்சங்கம் சார்பில், நேற்று பொங்கல் விழா நடந்தது. வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார். இலங்கை வடமாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் விழாவை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா இலங்கை இடையே, இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்த ஒப்பந்தம் இல்லை. இதனால், இரட்டை குடியுரிமை வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இலங்கை தமிழர்கள் நலன் கருதி, மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில், 10 லட்சம் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும், இலங்கைக்கு திரும்பினால் தான், இழந்த உரிமைகளை பெற முடியும். மேலும், அங்கு தமிழர்கள் ஆட்சி அமைவதற்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது இலங்கை அதிபராக வந்திருப்பவர் கோத்தபயா ராஜபக்சே. இலங்கை தமிழர்கள், தனக்கு ஓட்டு போடவில்லை என்பதால், சிங்களவர்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழர்களை புறக்கணிக்க துவங்கி உள்ளார். இலங்கையில், தமிழர் களுக்கு சொந்தமான நிலங்களை ஓரளவுக்குதான் ஒப்படைத்து உள்ளனர். ராணுவத்தினர் வசமுள்ள, 65 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஒப்படைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X