பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : ஜன 11, 2020
Advertisement

கழிப்பிடமின்றி பெண்கள் அவதி: சீரகபாடி ஊராட்சி, சின்னசீரகபாடியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, பொது கழிப்பிட வசதி இல்லாததால், மக்கள் திறந்தவெளியில் செல்லும் அவலம் உள்ளது. குறிப்பாக, பெண்கள் இரவில் மட்டும், புதர் பகுதிக்கு செல்வதால், விஷ ஜந்துக்களின் கடிக்கு ஆளாக நேரிடும். அதனால், பொது கழிப்பிடம் கட்டித்தர, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி.பாலசுப்ரமணியம், இடைப்பாடி.

சாலை, சாக்கடை வசதி இல்லை: சங்ககிரி, கோட்டவரதம்பட்டி ஊராட்சி, ஆவரங்கம்பாளையம், கணபதி நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, சாக்கடை, சாலை வசதிகள் இல்லை. மின்விளக்கு வசதியும் இல்லாததால், இரவில் குற்றச்சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதால், பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி அலுவலகத்தில், பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

- ஆர்.ராஜேந்திரன், சங்ககிரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X