பொது செய்தி

தமிழ்நாடு

தானும் மகிழ்ந்து பக்தர்களையும் மகிழ்வித்த இறைவன்! சிவன் கோவில்களில் மெய் சிலிர்த்த ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 11, 2020
Advertisement

சேலம்: ஆருத்ரா தரிசனத்தில், தானும் மகிழ்ந்து, பக்தர்களையும் மகிழ்வித்த இறைகோலம், சிவன் கோவில்களில் மெய் சிலிர்க்க நடந்தது.
சிவபெருமானுக்கு உகந்த, மூன்று திதி, மூன்று நட்சத்திரங்கள் என, ஆறு தரிசனங்களில், மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரம், 'மகா' தரிசனமாக துதிக்கப்படுகிறது. அன்று, சிவபெருமானை வழிபட்டால், தானும் மகிழ்ந்து, நாடிய அடியார்கள், பக்தர்களையும் மகிழ்விக்க செய்து, உலகம் உய்ய சகல ஐஸ்வர்யங்களையும், இறைவன் அருள்பாலிப்பது ஐதீகம். அதன்படி, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:15 மணி முதல், உற்சவர் நடராஜருக்கு, நறுமணமுடைய பல்வேறு பொருட்களால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. அது, சிவனடியார், திருவெம்பாவை பாடி, நேற்று காலை, 6:30 மணி வரை தொடர்ந்தது. பக்தர்கள் விரதமிருந்து, நடராஜர் பெருமானை தரிசனம் செய்தனர். காலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை திறக்கப்பட்டு, மூலவர் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை தாயாருக்கு ஆராதனை நடந்தது. பின், தங்க கவசத்தில் ஜொலித்தனர். தொடர்ந்து, உற்சவர் நடராஜருக்கு, கலச அபி?ஷகம் செய்து, ஆனந்த தாண்டவம் கோலத்தில், புஷ்ப அலங்காரத்தில், கற்பூர தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், 'சிவ' கோஷம் முழங்க வழிபட்டனர். சேலம், காசி விசுவநாதர் கோவிலில், மூலவர் காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதருக்கு, ஆராதனை நடந்தது. உற்சவர் நடராஜருக்கு, மகா அபி?ஷகம் செய்து, பக்தர்கள் தீபமேற்றி தரிசனம் செய்தனர். குகை, அம்பலவாணர் கோவிலில், உற்சவர் தில்லைக்கூத்தனுக்கு ஆருத்ரா அபி?ஷகம் நடந்தது. செவ்வாய்ப்பேட்டை, மீனாட்சி, சொக்கநாதர் கோவிலில், உற்சவர் நடராஜருக்கு, மகா அபி?ஷகம் செய்து, மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

ஆனந்த களி நடனமாடி...: உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சிவகாமி அம்மன், நடராஜ பெருமான், மூலவர் திருமேனி, உற்சவர் திருமேனிகளுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், கரும்புச்சாறு உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் அபி ?ஷகம் நடந்தது. சந்தன காப்பு, சர்வ அலங்காரத்தில் சிவகாமி அம்மன், நடராஜர் பெருமான் பல்லக்கில் எழுந்தருளி, ஆனந்த களி நடனம் ஆடி, கோவிலை வலம் வந்து, ஆருத்ரா தரிசனம் அளித்தனர். பின், அம்மன் கோவிலுக்கு சென்று, கதவை அடைத்து நடராஜரை உள்ளே விட மறுத்தது, அவர்கள் இடையே, சுந்தரமூர்த்தி நாயனார் தூது சென்று சமாதானம் செய்த திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், 108 லிட்டர் பால், தயிர், 108 கிலோ சந்தனம், கதம்ப பொடி, விபூதி, நெய் உள்பட 11 வகை அபி ?ஷக பூஜை நடந்தது. வசிஷ்டநதி தென்கரை, கைலாசநாதர் கோவிலில், தங்க நகை, புஷ்ப அலங்கார நடன கோலத்தில் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் சுவாமிகள், வீதியுலா நடந்தது. மேலும், ஓமலூர், காசி விஸ்வநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தில் காசிவிஸ்வநாதர் வீதியுலா நடந்தது. இதேபோல், அனைத்து சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X