தமிழ்நாடு

21 தலைவர்; 406 துணைத் தலைவருக்கு மறைமுக தேர்தல்: அதிக பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க., வியூகம்

Added : ஜன 11, 2020
Advertisement

சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், 21 தலைவர், 406 துணைத் தலைவர் பதவிக்கு, இன்று நடக்கும் மறைமுக தேர்தலில், அதிகளவு இடங்களை கைப்பற்ற, அ.தி.மு.க., வியூகம் வகுத்து களமிறங்கியுள்ளது.
சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு, நேரடி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 4,299 பதவியில், 403 பேர் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள, 3,896 பேர், தேர்தல் மூலம் வெற்றி பெற்றனர். அவர்களில் மொத்தமாக, 4,297 பேர் பதவியேற்றனர். கோணசமுத்திரம், கூனாண்டியூர் ஊராட்சிகளில், தலா ஒருவர் வீதம், ஊராட்சி வார்டு உறுப்பினர், இன்று காலை, 11:00 மணிக்குள் பதவியேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், அதன் துணைத் தலைவர், ஒன்றிய குழு தலைவர், அதன் துணைத்தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு, இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது. அதன்படி, 427 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதில், தலைவர், 21; துணைத்தலைவர், 406 பேர் அடங்குவர்.

பா.ம.க.,வுக்கே...: மாவட்ட ஊராட்சியின், 29 வார்டுகளில், அ.தி.மு.க., கூட்டணி, 23, ஆறு இடங்களை தி.மு.க., கைப்பற்றின. அதில், அ.தி.மு.க., 18, பா.ம.க., நான்கு, தே.மு.தி.க., ஒரு இடத்தை பிடித்தன. அவர்களில், ஒரு தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். கூட்டணி முடிவுப்படி, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், துணைத்தலைவர் பதவியை, அ.தி.மு.க., ஏற்கிறது.

ஒன்றியத்தில்...: ஒன்றிய கவுன்சிலர், 288ல், அ.தி.மு.க., 131, பா.ம.க., 39, தே.மு.தி.க., 5, த.மா.கா., ஒரு இடம் என, அக்கூட்டணி, 176 இடங்களையும், தி.மு.க., 76, காங்., 4, கம்யூ., 2, ம.தி.மு.க., ஒன்று என, அக்கூட்டணி, 83 இடங்களையும், சுயேச்சைகள், 29 இடங்களை கைப்பற்றியுள்ளன. இதில், 20 ஒன்றிய தலைவர், 20 துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். சுயேச்சைகள் வசமுள்ள, 10 சதவீத இடங்களில், சரிபாதிக்கு மேல், அ.தி.மு.க., வளைத்து போட்டுள்ளதால், அ.தி.மு.க., கூட்டணி, 20 ஒன்றிய தலைவர் பதவிகளையும் பிடிக்க முயற்சித்து வருகிறது. துணைத்தலைவர் பதவிகளை, கூட்டணி கட்சிக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளதாக, அ.தி.மு.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊராட்சி கவுன்சிலர்: கட்சி சார்பற்ற, ஊராட்சி கவுன்சிலர்களான, 3,597 பேர், அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்டு, 385 ஊராட்சி துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவரவர், சொந்த பலத்தை பொறுத்து, துணைத்தலைவருக்கு வாய்ப்புள்ளது.

தலைவர்: மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு, காலை, 11:00 மணிக்கு, மறைமுக தேர்தல் நடப்பதால், அதற்கு முன்னதாக, உறுப்பினர்கள், 29 பேரும் வர வேண்டும். 50 சதவீதம் பேர் வந்தாலே, தலைவரை தேர்ந்தெடுக்க, அதிகாரிகளால் நடவடிக்கை கோரப்படும். இல்லாதபட்சத்தில், தேர்தல் நிறுத்திவைக்கப்படும் என அறிவித்து, பின்னர் தேதி அறிவித்து நடத்தப்படும். இதே நடைமுறை, 20 ஒன்றிய தலைவர் தேர்தலில் கடைப்பிடிக்கப்படும்.

துணத்தலைவர்: மொத்தமுள்ள, 20 ஒன்றியம், 385 ஊராட்சிகளில், மாலை, 3:30 மணிக்கு, துணத்தலைவருக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. அதற்கு முன்னதாக, தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். துணைத்தலைவருக்கு இருவர் சம பலத்தில் இருந்தால், தலைவர் ஆதரவு பெற்று, வெற்றி பெறுவோர், துணைத்தலைவராக அறிவிக்கப்படுவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X