பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலருக்கு பயிற்சி

Added : ஜன 11, 2020
Advertisement

ஓமலூர்: மறைமுக தேர்தல் குறித்து, உதவி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
ஓமலூர் ஒன்றியத்தில், 33 ஊராட்சிகள் உள்ளன. அதில், மாவட்ட கவுன்சிலர் - 3, ஒன்றிய கவுன்சிலர் - 27, ஊராட்சி தலைவர் - 33 பேர் பதவியேற்றனர். இன்று, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், அதன் துணைத்தலைவர், ஒன்றிய குழு தலைவர், அதன் துணைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடக்கவுள்ளது. அதற்காக, ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் தலைமையில், நேற்று, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது. குறிப்பாக, வேட்பு மனு எவ்வாறு பெறுவது, முன்மொழிதல், தேர்தல் முடிவு அறிவிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கு, நேற்று பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், ஓட்டுப்பதிவுக்கு தேவையான வேட்பு மனு படிவம், பெட்டி, ஓட்டுச்சீட்டு, ரப்பர் ஸ்டாம்ப், மறைவு அட்டை உள்ளிட்ட பொருட்கள், உதவி அலுவலர்களிடம் வழங்கப்பட்டன.

நடுநிலையுடன்...: ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. உதவி தேர்தல் அலுவலர், பி.டி.ஓ., சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். துணை பி.டி.ஓ., பெரிய சாமி, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர் பின்பற்றும் வழிமுறை, தேர்தல் ஆணைய சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பேசினார். மேலும், துணைத் தலைவர் தேர்தலில், யாருக்கும் சாதகம், பாதகமின்றி, அதிகாரிகள் நடுநிலையுடன் நடக்க அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X