தமிழ்நாடு

கொளத்தூரில் தேர்தல் ஜூரம் உச்சம்: ஒன்றிய குழு தலைவருக்கு இன்று 'கிளைமாக்ஸ்'

Added : ஜன 11, 2020
Advertisement

கொளத்தூர்: கொளத்தூரில், அ.தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை இருந்தும், எஸ்.சி., கவுன்சிலர்கள் இல்லாததால், ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதில் சிக்கல் உள்ளது. அதேநேரம், தி.மு.க.,வில் எஸ்.சி., கவுன்சிலர் உள்ளதால், அக்கட்சியினருக்கு வாய்ப்புள்ளது. இதனால், அங்கு தேர்தல் ஜூரம் தீவிரமான நிலையில், இன்று, ஒன்றிய குழு தலைவரை தேர்வு செய்ய, 'கிளைமாக்ஸ்' நடப்பதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கொளத்தூரிலுள்ள, 12 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில், 6, 11வது வார்டு எஸ்.சி.,க்கு ஒதுக்கப்பட்டது. ஒன்றிய குழு தலைவர் பதவியும், எஸ்.சி.,(பொது) என, ஒதுக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் முடிவில், 9, 10, 12வது வார்டுகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அக்கட்சி சார்பில், 6, 11வது வார்டுகளில் போட்டியிட்ட எஸ்.சி., வேட்பாளர்கள் தோற்றனர். மொத்தமுள்ள, 12ல், அ.தி.மு.க., 3, பா.ம.க., 3, தி.மு.க., 4, சுயேச்சை, 2 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி ஆறு இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இரு சுயேச்சை கவுன்சிலரும், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. இதனால், அக்கூட்டணி வேட்பாளர் எண்ணிக்கை, 8 ஆக உயரும். பெரும்பான்மை இருப்பதால், அக்கூட்டணி கவுன்சிலரே, ஒன்றிய குழு தலைவராக பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அக்கூட்டணியில் எஸ்.சி., கவுன்சிலர் இல்லை. இதனால், பெரும்பான்மை இல்லாத தி.மு.க.,வைச் சேர்ந்த எஸ்.சி., கவுன்சிலர் ஒருவரையே, இன்று தலைவராக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு அ.தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதை சமாளிக்க, மாவட்டம் முழுவதுமிருந்து, தி.மு.க., நிர்வாகிகள், கொளத்தூரில் இன்று குவிய வாய்ப்புள்ளது. அதேபோல், அ.தி.மு.க., - பா.ம.க., நிர்வாகிகள், ஆதரவாளர்களும் குவிய திட்டமிட்டுள்ளதால், கொளத்தூரில் பதற்றம் நிலவுகிறது. அசம்பாவிதத்தை தவிர்க்க, ஒன்றிய அலுவலகத்தை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொளத்தூர் அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: இங்கு, ஆறு, 11வது வார்டில், அ.தி.மு.க., - எஸ்.சி., வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றிருந்தாலும், தலைவர் தேர்வு அமைதியான முறையில் நடந்திருக்கும். வேட்பாளர் தேர்வு, பிரசார யுக்தியில், அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் காட்டிய அலட்சியத்தால், இரு வார்டுகளையும் தி.மு.க., கைப்பற்றியது. இதுவே, கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் தேர்வில் நீடிக்கும் சிக்கல், பதற்றத்துக்கு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பதற்ற ஊராட்சிகளில்...: பனமரத்துப்பட்டி ஒன்றியத்திலுள்ள, 20 கிராம ஊராட்சிகளில், இன்று காலை, துணைத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அப்பதவியை கைப்பற்ற, குதிரை பேரம், ஆள் கடத்தல் உள்ளிட்டவை நடந்துள்ளதால், பல ஊராட்சிகளில் பதற்ற சூழல் நிலவுகிறது. இதனால், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜா, நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, சந்தியூர், மூக்குத்திப்பாளையம், குரால்நத்தம், வாழக்குட்டப்பட்டி, சந்தியூர் ஆட்டையாம்பட்டி, அமானிகொண்டலாம்பட்டி ஆகிய ஊராட்சிக்கு, கூடுதல் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தினார். இதனால், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களுக்கு, பலத்த பாதுகாப்பு வழங்க, போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X