பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' கவுன்சிலர் கைது விவகாரம்: கூட்டுறவு வங்கி தலைவர்; தி.மு.க., - எம்.பி., பரஸ்பர குற்றச்சாட்டு

Added : ஜன 11, 2020
Advertisement

ஆத்தூர்: முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கள்ளக்குறிச்சி, தி.மு.க., - எம்.பி., கவுதமசிகாமணியும், அ.தி.மு.க.,வின் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனும் பரஸ்பர குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆத்தூர், நாராயணசாமி தெருவிலுள்ள ரேஷன் கடையில், தமிழக அரசின் பொங்கல் பொருட்களை, 1,000 ரூபாயுடன் வினியோகித்தபோது, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க., நிர்வாகிகள் புரு ?ஷாத்தமன், ராணி ஆகியோர், தங்களை தாக்கியதாக அளித்த புகார்படி, தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலின், தம்பிதுரை மீது வழக்குப்பதிந்து, ஸ்டாலினை, போலீசார் கைது செய்தனர். இதைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி தி.மு.க., - எம்.பி., கவுதமசிகாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க.,வினருக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கியதால், ஸ்டாலின், தம்பிதுரை தட்டிக்கேட்டனர். இதனால், அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்து, ஸ்டாலின், தம்பி துரையை தாக்கிவிட்டு, தடுமாறி விழுந்த புரு?ஷாத்தமன், ராணி ஆகியோரின் பொய் புகாரில், ஸ்டாலினை கைது செய்துள்ளனர். அ.தி.மு.க.,வின் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கூட்டுறவுத்துறையில் செய்யும் ஊழல், பல்வேறு துறைகளில் அவரது அத்துமீறல் குறித்து, ஸ்டாலின் பலமுறை தட்டிக்கேட்டார். இந்த காழ்ப்புணர்ச்சியால், போலீசார், ஸ்டாலினை கைது செய்தனர். இதை, வன்மையாக கண்டிக்கிறோம். வழக்கை திரும்ப பெற்று, அவரை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, இளங்கோவன் கூறியதாவது: தி.மு.க.,வினர் திட்டமிட்டு ரகளை செய்து, அ.தி.மு.க.,வினரை தாக்கியதால், போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஸ்டாலின் மீது, எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. கூட்டுறவு சங்கத்தில் ஊழல் கிடையாது. லோக்சபா தேர்தலில் விவசாயம், நகை, கல்வி கடன்களை தள்ளுபடி செய்வதாக, பொய் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற எம்.பி., கவுதமசிகாமணியை காணவில்லை என, தொகுதி மக்கள் தேடுகின்றனர். அ.தி.மு.க.,வை பற்றி பேச, அவருக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X