பொது செய்தி

தமிழ்நாடு

1,712 போலீசார் பாதுகாப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

சேலம்: இன்று நடக்கும் மறைமுக தேர்தல் பணியில், 1,712 போலீசார், பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், 427 பதவிக்கு, மறைமுக தேர்தல், இன்று நடக்கிறது. அதில், ஊரக பகுதியில், இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள், 11 டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் தலா, 36 பேர், சிறப்பு எஸ்.ஐ., - போலீசார், 782 பேர், ஆயுதப்படை போலீசார், 130 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 70 பேர், ஊர்க்காவல் படையினர், 180 பேர் என, 1,247 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாநகர் போலீஸ் 465 பேர்: மாநகர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், உதவி ஆணையர் - 6 பேர், இன்ஸ்பெக்டர் - 12, எஸ்.ஐ., - 21, போலீசார் - 215, ஆயுதப்படை போலீசார் - 100, விரைவு படையினர் - 30, தமிழ்நாடு சிறப்பு படையினர் - 30, தனிப்பிரிவு போலீசார், 45, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் - 6 பேர் என, 465 பேர் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதில், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், உதவி ஆணையர் ஈஸ்வரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் - 3, எஸ்.ஐ.,க்கள் - 6, போலீசார் - 40 பேர், விரைவு போலீசார் ஒருவர் என, 60 பேர் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X