பொது செய்தி

தமிழ்நாடு

செலவிட்ட தொகை கிடைக்குமா? செயலர்கள் தவிப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. 2016, அக்., 25ல், தலைவர்களின் பதவி காலம் முடிந்தது. பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கீழ், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டு, ஊராட்சியை நிர்வாகம் செய்தனர். நீண்ட நாளாக, உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், அரசிடமிருந்து நிதி வரவில்லை. பொருட்களை கடனாக வாங்கி, குடிநீர் பிரச்னையை சரிசெய்யுங்கள். நிதி வந்த பின் வாங்கிகொள்ளலாம் என, தனி அலுவலர்கள், ஊராட்சி செயலர்களிடம் தெரிவித்தனர். அதனால், வறட்சி காலத்தில், குடிநீர் வினியோகத்துக்கு தேவையான குழாய், ஒயர், மோட்டார் பழுதுபார்ப்பு, உதிரி பாகம், தெருவிளக்கு உதிரி பாகம் உள்ளிட்டவற்றை, தனியார் கடைகளில் கடனாக பெற்றனர். அதற்கான ரசீதை பெற்று, உரிய தொகையை வழங்குமாறு கேட்டுள்ளனர். அத்துடன், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்த ஆட்களுக்கு கூலி, டெங்கு கொசு ஒழிப்புக்கு மருந்து அடிக்க டீசல், பெட்ரோல், பிளீச்சிங் பவுடர் வாங்க, பணியாளருக்கு சாப்பாடு ஆகியவற்றுக்கு கையிலிருந்து செலவிட்டுள்ளனர். குறிப்பாக, ஊராட்சி செயலர்கள், தலா, 50 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளனர். சில செயலர், இரு ஊராட்சிக்கு பொறுப்பு வகித்து செலவிட்டுள்ளனர். ஊராட்சிக்கு நிதி வராத நிலையில், உள்ளாட்சி தேர்தல் வந்தது. தனி அலுவலர், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்களும் பதவி ஏற்றனர். காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம், தலைவருக்கு உண்டு. ஆனால், ஊராட்சியிலுள்ள கடன் குறித்து தெரிவித்தால், தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என, ஊராட்சி செயலர்கள் புலம்புகின்றனர். இதனால், தனி அலுவலர் காலத்தில் செலவிட்ட தொகையை யாரிடம் பெறுவது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதுகுறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'நிதி வந்தவுடன், செலவிட்ட தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X