பொது செய்தி

தமிழ்நாடு

குதிரை பேரம்

Added : ஜன 11, 2020
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்திலுள்ள, 385 ஊராட்சிகளிலும், ஒரு ஊராட்சிக்கு மூன்று பேர், துணைத் தலைவர் பதவியை பிடிக்க, களத்தில் உள்ளனர். ஆதரவு கட்சி கவுன்சிலர்களுக்கு ஈடுகொடுக்க சுயேச்சைகளும் களத்தில் உள்ளதால், உச்சக்கட்ட குதிரை பேரம் ஏற்பட்டுள்ளது. இன்று, அந்தந்த ஊராட்சிகளில், உதவி தேர்தல் அலுவலர் மூலம், தேர்தல் நடக்கிறது. போட்டி அதிகரிப்பால், பெரும்பாலான ஊராட்சிகளில், களேபர காட்சிகள் அரங்கேறும் என்பதால், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், அதற்குரிய ஊராட்சிகளில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில், மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X