பொது செய்தி

தமிழ்நாடு

நிதியில்லாத ஊராட்சிகள்: புது தலைவர்கள் கலக்கம்

Added : ஜன 11, 2020
Advertisement

பனமரத்துப்பட்டி: ஊராட்சிகளில், பொது நிதியில்லாததால், புதிதாக பதவி ஏற்ற தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. அங்கு, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், கடந்த, 6ல் பதவி ஏற்றனர். துணைத்தலைவர் பதவியேற்புக்கு பின், ஊராட்சியின் கணக்கு, வழக்கு, பொருட்கள், முறையாக தலைவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதற்கு முன், நிதி நிலைமை குறித்து, ஊராட்சி செயலர்களிடம், தலைவர்கள் விசாரித்தனர். 10 ஊராட்சிகளில், பொது நிதியில்லாததால், அந்த தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர். ஊராட்சியில், மொத்தம் ஒன்பது வகை வங்கி கணக்குகள் உள்ளன. அதில், ஒன்றாவது(பொது நிதி கணக்கு) கணக்கில், மாநில நிதிக்குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய், குறைந்தபட்ச மானியம், உள்ளளளூர் வரி வசூல் வருவாய் ஆகியவை வரவு வைக்கப்படும். அதிலிருக்கும் நிதியை, தலைவர்கள் எடுத்து, குடிநீர், தெருவிளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி பராமரிப்புக்கு செலவிடலாம். பொது நிதியில்லாததால், தலைவர்கள் கையிலிருந்து பணம் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது எப்படி என, புது தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதுகுறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், மூன்றாண்டாக மத்திய அரசின் நிதி, ஊராட்சிக்கு வரவில்லை. இந்நிலையில், தனி அலுவலர்கள், ஊராட்சியை நிர்வகித்தனர். ஓரிரு மாதத்தில், வரவேண்டிய நிதி, ஊராட்சிக்கு கிடைக்கும். அதுவரை, தலைவர்கள் சமாளிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X