பொது செய்தி

தமிழ்நாடு

தரைமட்ட பாலம் கட்ட நடவடிக்கை

Added : ஜன 11, 2020
Share
Advertisement

சங்ககிரி: தரைமட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சங்ககிரி, பழைய பஸ் ஸ்டாண்ட் முன், இடைப்பாடி பிரதான சாலையில், பாதாள சாக்கடை மீது போடப்பட்ட தரைமட்ட பாலம், கனரக வாகன பாரம் தாங்காமல், அதன் கான்கிரீட் உடைந்து பள்ளம் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், ஜல்லி கொட்டி சீரமைத்தாலும், வாகனங்கள் செல்வதால் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு, இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வந்தனர். இதுகுறித்து, கடந்த, 8ல், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, புதிதாக தரைமட்டபாலம் அமைக்க, பொக்லைன் மூலம், பள்ளம் தோண்டி, கான்கிரீட் அமைக்கும் பணியில், நேற்று, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X